Friday, January 24, 2014
இலங்கை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலர் லலித் வீரதுங்க ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து, இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விபரித்துள்ளார். ஜெனீவாவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, லலித் வீரதுங்க எடுத்துக் கூறியுள்ளார்.
இதன்போது, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எந்தக் கருத்தையும் வெளியிட்டதாக, இலங்கை அரச தரப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்படவில்லை.
இதையடுத்து, அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் அன்டனியோ குரேரஸ், அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் தலைவர் பீட்டர் மௌரர் ஆகியோரையும் லலித் வீரதுங்க சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளை அடுத்து, இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலவரங்கள் குறித்து, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இந்த சந்திப்புகளில், ஜனாதிபதியின் செயலருடன், உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் பங்கேற்றுள்ளது.

No comments:
Post a Comment