Saturday, January 11, 2014
இலங்கை::30 ஆண்டுகால யுத்தத்தின் போது பொதுமக்களும், ஆயு தப்படையினரும், பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதை நாம் மறுக்க முடியாது. யுத்தம் நடைபெறும் போது இர ண்டு பலம்மிக்க ஆயுதப்படைகள் ஒருசாராரை எதிர்த்து மற்றசா ரார் போராடும் போது அப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் இருதரப்பினரின் துப்பாக்கி வேட்டுக்கும் இலக்காகி மரணமடை வதையும் எவரும் தடுக்க முடியாது.

யூகோஸ்லாவியாவில் நடை பெற்ற பிரிவினைவாத யுத்தத்தின் போது பல
பொதுமக்கள் கொல் லப்பட்டனர். மேலும் பலர் எதிரணி
ஆயுதப்படையினரால் வேண்டுமென்றே
குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டனர். இத்த கைய யுத்தங்கள் ஆபிரிக்க நாடுகளில்
இன்றும் நடந்து கொண் டிருக்கின்றன.
யுத்தம் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கும் போது இரு தரப்பி லும் மக்கள்
கொல்லப்படுவார்கள் என்பதே பொருளாகும். யுத்த த்தின் போது ஒரு இராணுவம் எதிர்
இராணுவத்தை மாத்திரம் குறிவைத்து தாக்க முடியாது.
இந்த தாக்குதலில் அப்பாவி மக்க ளும் கொல்லப்படுவது சகஜமே. அது போன்று எதிர் இராணு வம் மற்ற இராணுவத்தை தாக்கும் போதும் பொது மக்கள் கொல் லப்படுகிறார்கள். 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் பயங்கரவாதிகளின் தரப்பிலும் ஆயுதப்படைகளின் தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இவை தான், உண்மையாக நடந்த நிகழ்வுகளாகும்.

2009ம் ஆண்டு மே 18ம் திகதியன்று புலிகள் எமது ஆயுதப் படை வீரர்களால் முற்றாக
அழிக்கப்பட்ட பின்னர் வன்னிப் பிர தேசத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடு வாசல்களையும்,
சொத்துக் களையும், உறவுகளையும் இழந்து துன்பத்தில் துவண்டு கொண் டிருந்ததையும் நாம்
மறந்துவிட முடியாது. இன்று யுத்தம் முடி வடைந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கு,
கிழக்கு மாகா ணங்களில் உள்ள தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்க ளும்
நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நிலவி வந்த சந் தேக உணர்வும், பகைமை
உணர்வும் நீங்கி இம்மூன்று சமூகங்க ளும் ஒற்றுமையோடு வாழும் புதிய யுகம் இன்று
தோன்றியிருக் கிறது. இப்படியான சந்தர்ப்பத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும்
சிலரும் புலிகளின் ஓரிரு ஆதரவாளர்களும் கடந்த கால துன்பங்களை மீண்டும்
நினைவூட்டக்கூடிய வகை யில் நடந்து கொள்வது வேதனையை அளிக்கிறது.
நடந்த முடிந்த அழிவுகளையும், இழப்புகளையும் நினைத்து நாம் குரோத உணர்வுடன்
பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்பட் டால் எங்கள் தாய்த்திருநாட்டில் என்றுமே சமாதானம்
நிலைத் திருக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க இராஜா ங்க திணைக்களத்தைச்
சேர்ந்த யுத்தக்குற்றச்சாட்டுகள் பற்றி விசா ரணை செய்யும் இராஜதந்திரியான ஸ்ரீபன்
ரப் இங்கு வந்து யுத் தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்கிறேன் என்ற போர்வை யில்
குட்டையை கிழப்ப முயற்சி செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த இராஜதந்திரி மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு
ஜோசப்பையும், யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகத்தையும் சந்தித்து உரை
யாடிய போது இவ்விரு மதிப்புக்குரிய ஆயர்மார்கள் யுத்தத்தின் இறுதி நாட்களில் இலங்கை
பாதுகாப்பு படையினர் கிளஸ்டர் மற் றும் இரசாயன குண்டுகளை அப்பாவி பொதுமக்கள் மீது
பயன் படுத்தி அவர்களை உயிரிழக்கச் செய்தனர் என்ற பாரதூரமான குற்றச்சாட்டை
சுமத்தினார்கள்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுதினமே இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான பிரிகேடியர் ருவன்
வணிகசூரிய, 30 வருடகாலமாக இல ங்கையில் இடம்பெற்ற யுத்த வரலாற்றில் எந்தவொரு
சந்தர்ப்பத் திலும் கிளஸ்டர் குண்டுகளையோ, இரசாயன குண்டுகளையோ இராணுவம்
பயன்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக மறுப் புத் தெரிவித்தார்.
ஆள் இல்லாத விமானங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்ட பயங்கர வாதிகளின் இலக்குகளின் மீது
மாத்திரம் எமது விமானப்படை தாக்குதல்களை நடத்தியது என்றும் சர்வதேச தரத்தில் ஏற்றுக்
கொண்ட ஆயுதங்களே இத்தாக்குதல்களின் போது பயன்படுத் தப்பட்டதென்றும் பிரிகேடியர்
ருவன் வணிகசூரிய அறிவித்துள் ளார்.
கடந்த காலத்தின் துன்பகரமான நினைவுகளை ஞாபகப்படுத்தி அவை குறித்து சர்வதேச
மட்டத்தில் விசாரணைகளை செய்யுமாறு நம் நாட்டவர்கள் பகிரங்க வேண்டுகோள்களை
விடுப்பதனால் பாதி க்கப்படுவது இந்நாட்டு மக்கள்தான் என்பதை இத்தகைய குற்றச்
சாட்டுகளை சுமத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நம்நாட்டு மக்களிடையே தோன்றியு ள்ள நல்லிணக்கப்பாட்டையும்,
நட்புறவையும் சிதைக்கக்கூடிய வகையில் இத்தகைய முறைப்பாடுகளை சர்வதேச அரங்கில்
நம்நாட்டவர்கள் செய்வது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
நம்நாட்டு மக்கள் இன்று கடந்த கால துன்பங்களை மறந்து யுத்த மற்ற சூழலில் நிம்மதியாக
வாழவே விரும்புகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தங்கள் அரசியல் செல்வாக்கை
அதிகரிப்பதற்காக ஒருசாரார்
வேண்டுமென்றே சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக
பிரச்சினைகளை கிளப்புவதன் மூலம் மீண்டும் எங்கள் நாட்டில் இன்னுமொரு வன்முறையை
தோற்றுவிக்க பார்க்கிறார் களா? என்று அவர்களிடம் கேட்க விரும்புகிறோம்.
யுத்தம் இல்லாத புத்தம் புதிய பூமியை தோற்றுவிப்பதற்கு நாம் அனைவரும் எமது பங்களிப்பை வழங்குவது அவசியமாகும்.
யுத்தம் இல்லாத புத்தம் புதிய பூமியை தோற்றுவிப்பதற்கு நாம் அனைவரும் எமது பங்களிப்பை வழங்குவது அவசியமாகும்.

No comments:
Post a Comment