Saturday, January 11, 2014

அமெரிக்க அதிகாரி வெளியேற உத்தரவு : இந்தியா பதிலடி!!

Saturday, January 11, 2014
புதுடெல்லி::வேலைக்காரப் பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய தூதரக அதிகாரி தேவயானியை அமெரிக்க அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, அவருக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் ஐ.நா சிறப்பு தூதரக பதவி உயர்வு அளித்தது.
 
அவர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது. விலக்கு அளிக்க மறுத்த அமெரிக்கா, தேவயானி வழக்கை சந்திக்க வேண்டும் என கூறியது. இதை இந்தியா ஏற்காததால், அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரை 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டுள்ளது. அந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் தேவயானி விவகாரத்தில் தலையிட்ட அதிகாரி என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment