Sunday, January 12, 2014
இலங்கை::இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல்
சிசனை அழைத்து எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சு
அறிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்க ராஜந்திரிகள் யுத்த வலயத்திற்கு
சென்றிருந்த போது வெளியிடப்பட்ட டுவிட்டர் தகவல்கள் குறித்து அரசாங்கம்
அதிருப்தி வெளியிட்டிருந்தது.
இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்த இடம் என குறித்த டுவிட்டர் புகைப்படத்தில் அமெரிக்கத் தூதரம் தெரிவித்திருந்தது.எனினும், இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த டுவிட் தகவல்கள் குறித்து விளக்கம் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அமெரிக்கத் தூதுவரை அழைத்து அரசாங்கம் எதிர்ப்பை வெளியிடும் என ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

No comments:
Post a Comment