Sunday, January 12, 2014
இலங்கை::கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபரை இலங்கைக்கு வரக்கூடாது, இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்த கனடாவின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் அண்மையில் இலங்கை வந்து சென்றார். இதிலிருந்து அவரது இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரும் இவ்வாறான நாடகமாடும் பெண்தான். இவருக்கு நடிப்பு திறமை இருப்பதால் அந்த நாடகத்தை சிறப்பாகவே அரங்கேற்றுகிறார். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்க்கைத்தரம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் இலங்கை தமிழ் மக்கள் பற்றி கவனம் செலுத்துவது பல சந்தேகங்களை தூண்டுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இலங்கை வாழ் தமிழ் மக்கள் மட்டில் மிகுந்த அனுதாபத்தையும் இரக்கத்தையும் கொண்டுள்ளனர். இதனை ஜெயலலிதா அம்மையார் தனது அரசியல் பயணத்தை மேற்கொள்ள பயன்படுத்துகிறார். இது ஒருபுறமிருக்க இலங்கையின் வடபிராந்திய மீனவர்கள் அத்துமீறி இந்திய கடற்பரப்புக்குள் வந்தனர் என்று குற்றஞ்சாட்டி அவர்களையும் தமிழ் நாட்டு சிறைகளில் ஜெயலலிதா அடைத்துள்ளார். இங்கு வடபிராந்திய மீனவர்கள் தமிழர்கள் என்ற விடயத்தை அவர் வேண்டுமென்று மறந்து செயற்படுகிறார். இது ஜெயலலிதா அம்மையாரின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறு கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை
எடுத்து நோக்கும் பொழுது, ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்களின் சில குழுக்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது பிரதேசங்களில் அல்லாமல் இலங்கையை தமது அரசியல் ஆடுகளமாக அல்லது வேட்டைக்களமாக பயன்படுத்தி வருகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க கடந்த சில வாரங்களில் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்த சில வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசா விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதில் கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாட்டு ஊடகவியலாளர் எனக்கூறிக் கொள்ளும் மகா பிரபாகரன் ஆகியோரை குறிப்பிடலாம். சுற்றுலா விசாவில் வருகை தருபவர்கள் இங்குள்ள இயற்கை வனப்புமிக்க காட்சிகளை கண்டுகழித்துவிட்டு செல்வதுதான் சாதாரண எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் நாம் குறிப்பிட்ட சில வெளிநாட்டவர்கள் இங்கு வந்து அரசியல் மற்றும் வேறு நோக்கங்களுக்காக தகவல்களை திரட்டுகின்ற வேலையையும் செய்துள்ளனர்.
பின்னர் அந்த தகவல்களை உண்மைக்கு புறம்பான செய்திகளாக மாற்றி வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத் துள்ளனர். இது சுற்றுலா விசாவில் வருகின்ற ஒருவர் செய்கின்ற காரியமல்ல. இலங்கை பிரஜைகளாக இருக்கின்ற நாம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்றால் சாதாரணமாக என்னென்ன விடயங்களை செய்வோம் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். நாம் வேறொரு நாட்டுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கு அரசியல் வேலைகளில் ஈடுபட்டால் எமக்கு பாரிய தண்டனைகள் கிடைக்கும். அதே நிலைதான் இலங்கையிலும் உள்ளது. இருந்தாலும் இலங்கை அரசாங்கமும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும் பொறுமையுடன் செயற்பட்டு இந்த நபர்களை நாடுக டத்தியதோடு கருமங்களை கட்டுப்படுத்திக் கொண்டனர். அதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்த விடயம் முடிவடைந்து இரண்டு மூன்று தினங்களில் கனடாவின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் என்னும் மாபெரும் ராஜதந்திர நடிகை இலங்கைக்கு வந்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் இந்த விஜயத்தை மேற்கொண்டமைக்கு ஒரே ஒரு காரணமே உள்ளது.
கனடாவில் தாம் பிரதிநிதித் துவப்படுத்தும் பிரதேசத்தில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களை திருப்திப்படுத்தி அவர்களது வாக்குகளை பெற்றுக் கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இலங்¨க்கு வந்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ராதிகா சிற்சபேசன் ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருப்பார். இருந்தாலும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் மனித உரிமை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இப்போது இலங்கைக்கு வருவது ராதிகாவுக்கு பல நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சிலர் கருதலாம். ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கைக்கு வந்து இலங்கையின் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்கு உண்மையான ஆர்வம் இருக்குமாயின், யுத்தம் முடிவடைந்தது கடந்த நான்கரை வருடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வந்து சென்றிருக்கலாம். அல்லது கனடா பிரதமரை இலங்கைக்கு பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள, இலங்கைக்கு செல்லும்படி அவர் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நிலைமை இவ்வாறிருக்க அவருக்கு இலங்கைக்கு விஜயம் செய்து தகவல்களை திரட்ட வேண்டும் என்ற நல்லெண்ணம் இருக்குமாயின் அவர் இந்த காலகட்டத்தை தவிர்த்து ஏப்ரல் மாதம் அல்லது மே மாதத்தில் வந்திருக்கலாம். ஏன் இப்போது வந்தார் என்பது ஒரு கேள்விக்குறி. அதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ராதிகா சிற்சபேசன் யாரை சந்தித்தார் என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இப்படியானவர்கள் இலங்கைக்கு வருகை தருவ தனால் புலம்பெயர் தமிழர்கள் குறித்து இலங்கை வாழ் சிங்களவர்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் எழலாம். நல்லிணக்கம் என்பது ஒரு தரப்பிலிருந்தும் வரவேண்டிய ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் உருவாகும் உறவாகும். அப்படியாயின் யுத்தம் முடிவடைந்து கடந்த நான்கரை வருடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையில் நல்லிணக்கம் கட்டியெழுப் பப்பட்டது. ஆனால் புலம்பெயர் தமிழர்களில் சில குழுக்கள் இதனை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்கின்றனர் என்பதற்கு ராதிகாவின் விஜயம் ஒரு உதாரணம்.
கனேடிய நாடா ளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் என்பது உண்மை யில்லை. இதற் கிடையில் ராதிகா மேலும் ஒரு நாடகத்தை நன்கு மேடையேற்றிருந்தார். கனேடிய பாரா ளுமன்ற உறுப்பினர் யாழ் ரில்கோ விடுதியில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளி வந்தது. பின்னர் கொ ழும்பில் உள்ள ஹோட் டலில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. இந்த இரண்டு செய்திகளுமே உண்மைக்கு புறம்பானவை. யாழ் ரில்கோ விடுதி முகாமையாளர், அவ்வா¡றான ஒரு சம்பவம் தமது ஹோட்டலில் இடம்பெறவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். இது ஒரு பொய்யான செய்தி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ் டில்கோ விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று கொழும்பு குடிவரவு குடியகல்வு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம், அதிகாரிகள் சில விசாரணைகள் நடத்தியிருந்தாலும் ராதிகாவை வீட்டுக்காவலில் வைத்தமை என்பது உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதை மட்டும் எம்மால் உறுதிபட கூற முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ராதிகா இலங்கைக்கு வருவதற்கான காரணம். மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், ராதிகா இப்போது இலங்கையை பார்க்க வந்தமைக்கு உள் நோக்கம் உண்டு. இந்த விஜயத்தை பல மாதங்களுக்கு முன்னர் அல்லது இந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் மேற்கொண்டிருக் கலாம். இந்த காலத்தை தெரிவு செய்ததன் காரணம் என்ன? இதனால் புலம் பெயர் தமிழ் மக்கள் மட்டில் சிங்கள மக்களுக்கு உள்ள நன்மதிப்பு இழக்கப்படலாம். தமிழ் சிங்கள மக்க ளுக்கிடையே கட்டியெழுப்பப்படும் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.
நம்பிக்கை சீர்குலைய இட முண்டு. எனவே இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், இது விடயம் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். ராதிகா சுற்றுலா விசாவில் வந்துள்ளார். எனவே அந்த விசாவில் உள்ள வரையறை மற்றும் விதிமுறைக்கமைய செயல்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் அந்த சட்டங்களை அவர் மீறியுள்ளார். கனடாவில் குடியேறியுள்ள தமிழர்களிடம் வாக்கு சேகரிக்கும் நோக்கிலேயே ராதிக சிற்சபேசன் இலங்கை வந்துள்ளார்.
கனடாவில் வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பலர் குடியேறியுள்ளதாகவும் அவர்களின் வாக்குகளைப் பெறவே ராதிகா வடக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த ஆண்டு இலங்கைக்கு ஜெனீவாவில் பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் அவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். ஜெனீவாவில் இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு தருகின்றமை பெருமைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவை போன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த கவிஞர் ஜெயபாலனும் சில அத்துமீறல்களை மேற்கொண்டார். அது பலன் தரவில்லை. நாடு கடத்தப்பட்டார். அதே போன்று தமிழ்நாடு ஊடகவியலாளர் என்று கூறிக்கொண்டு இங்கு வந்த மகா பிரபாகரனுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. இப்படி இலங்கைக்கு வந்தவர்கள் இலங்கை தமிழருக்கு ஏதேனும் நன்மை செய்தார்களா? இல்லை. மாறாக தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கியிருக்கிறார்கள். நாம் இவர்களிடம் அன்பாக கேட்டுக்கொள்வது என்னவென்றால் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் தராதீர்கள் என்பதே.
இது விடயம் தொடர்பில் நீங்கள் கருத்து கூற விரும்பினால் மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்

![]() |

No comments:
Post a Comment