Thursday, January 23, 2014
சென்னை::குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26_ந் தேதி குடியரசு தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோன்ற முக்கியமான தினங்களில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடலாம் என்று கருதி தமிழகத்தின் முக்கியமான ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது வழக்கம். அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடம் குடியரசு தினமானது வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட இருக்கிறது. அன்று சதி வேலை செய்திட பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு இம்மாத இறுதி வரை பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் போன்ற முக்கியமான ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் <ஈடுபட்டுள்ளனர். அடுத்தகட்டமாக இதில் மோப்பநாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ரெயில் நிலையத்திற்குள் நுழையும் பயணிகளின் உடைமைகள் மற்றும் மூட்டை முடிச்சுகள் அனைத்தும் வெடிகுண்டு சோதனை மற்றும் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் நுழைவாயிலில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் <டுபட்டுள்ளனர். மேலும் மறைமுகமான பகுதிகளில் கோபுரங்கள் அமைத்தும் ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராவினால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் பயணிகளை போன்றே சாதாரண உடை அணிந்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முழுவதும் முழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகள் அதிகம் கூடுகின்ற எழும்பூர், தாம்பரம், மாம்பலம் உள்பட முக்கியமான ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு வழக்கத்தைவிடவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
"குடியரசு தினத்தின்போது ரெயில்வே போலீஸ் இலவச உதவி எண் 9962500500 மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை இலவச உதவி எண் 9003161710 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ரெயில் குற்றங்கள் குறித்தும், ரெயில் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடக்கும் பொருட்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும். எனவே பொதுமக்களும் பாதுகாப்பை திறம்பட மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment