Thursday, January 23, 2014

ராஜிவ் கொலை வழக்கில் கைதான நளினி 30 நாள் பரோல் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு!

Thursday, January 23, 2014
சென்னை::ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
 
கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். எனது தந்தை சங்கரநாராயணன் நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பலவானபுரத்தில் வசித்து வருகிறார்.அவருக்கு 90 வயது ஆகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை. தந்தையை பார்க்க எனக்கு ஒரு மாத பரோலில் செல்ல அனுமதி கோரி சிறை துறை கூடுதல் டிஜிபியிடம் மனு கொடுத்தேன்.

ஆனால் இதுவரை மனு குறித்து டிஜிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.இந்த மனு, நீதிபதிகள் ராஜேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த மாதம் 11ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். அன்றைக்கு அரசும், சிறைத் துறை கூடுதல் டிஜிபியும் பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
 

No comments:

Post a Comment