Thursday, January 23, 2014

கடலில் கவிழ்ந்தது இலங்கை படகு!

Thursday, January 23, 2014
மண்டபம்::தொண்டி கடல் பகுதியில், ஒரு பைபர் படகு சில நாட்களாக மூழ்கிய நிலையில் மிதந்தது. இதுகுறித்து, மரைன் போலீசார் மண்டபம் இந்திய கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
இந்திய கடலோர காவல்படையினர் மூழ்கிய படகை மீட்டு, மண்டபம் நிலைய கடல் பகுதிக்கு, ஜன., 18ல், கொண்டு வந்தனர். இப்படகில் சிங்கள எழுத்தும், ஐ.எம்.யூ.எல்.1418 எம்.டி.ஆர்., என, எண்களும் இருந்ததால், இவை இலங்கை படகாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வரும், 'கியூ' பிரிவு போலீசார் கூறியதாவது:
 
கடலில் கவிழ்ந்து கிடந்த இலங்கை மாத்தரப்பகுதியை சேர்ந்த பைபர் படகை, யாழ்பாணம் பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியிருக்கலாம், என சந்தேகித்து விசாரித்து வருகிறோம். படகிற்குள் மீன்பிடி வலைகள் மற்றும் அழுகிய நிலையில் மீன்கள் இருந்தது, என்றனர்.

No comments:

Post a Comment