இலங்கை::ஒரு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிக்கு சமூகப் பாதுகாப்பு, வளமான நல்வாழ்வு என்பன முக்கியமானவை. இலங்கையில், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த சூழல் ஏற்படுத்த அரசு மற்றும் சமூகங்களின் இடையே நல்லுறவுகளை வலுவூட்டி, குடிமக்கள் மற்றும் அரசாங்கத்தின் இடையே நம்பிக்கையை கட்டியெழுப்பி, உள்ளூர் மட்டத்தில் மோதல்களை குறைத்து, உள்நாட்டு போரில் ஒரு கால் நூற்றாண்டு பாதிக்கப்ட்டவர்களை குணப்படுத்தும் நடவடிக்கையில் ஆசியா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.”
ஆசிய அறக்கட்டளை காப்பாளர் குழுவின் நிறைவேற்றுக் குழு தலைவரும் தூதுவருமான திரு.மைக்கல் ஆமகோஸ்ட் தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 21 ஜனவரி 2014 அன்று சந்தித்து கலந்துரையாடினார்கள்.
ஆசிய அறக்கட்டளையின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. ஆளுநரும் குழுத்தலைவரும் ஞபாகார்த்தப் பரிசுகளை பரிமாறிக் கொண்டார்கள்.
வட மகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.






No comments:
Post a Comment