Wednesday, January 22, 2014

மகாதேவா ஆச்சிரம சைவச்சிறுவர் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி விஜயம்!

Wednesday, January 22, 2014
இலங்கை::
முரண்பாடு முடிவுற்றதை தொடர்ந்து இலங்கை தெளிவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதனால் எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கால அவகாசம் மிக அவசியமானது. அதைவிடுத்து காலவரையறை நிர்ணயிப்பது பயனளிக்காது என்று ஐஸ்லாந்து நாட்டின் ஜனாதிபதி ஒலாஃபுர் ரக்நர் கிறிம்சன்(Ólafur Ragnar Grímsson) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐஸ்லாந்து ஜனாதிபதி அபுதாபி நகரிலுள்ள எமிரேட்ஸ் பலஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்து இருபக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இப்பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இப்பேச்சுவார்த்தையின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தாம் இதற்கு முன்னர் இரு தடவைகள் சந்தித்ததை நினைவு கூர்ந்ததுடன், மீண்டும் அவரை சந்திக்கக் கிடைத்ததையிட்டு திருப்தியையும் அவர் வெளியிட்டார்.

எம்மிரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பாடலை வளர்க்க வேண்டும்’ என்பதே என் கருத்து என்று குறிப்பிட்ட ஐஸ்லாந்து ஜனாதிபதி கடற்றொழில், இறைச்சி உற்பத்தி, மற்றும் பழச் செய்கை ஆகிய துறைகளில் வர்த்தக அடிப்படையிலான திட்டங்களை இலங்கையுடன் ஆரம்பிப்பதற்குரிய யோசனையையும் அவர் தெரிவித்தார். ‘இந்த உற்பத்திகளுக்காக 50, 60 நாடுகளில் திருப்திகரமான சந்தை வாய்ப்பு நிலவுவதாகவும் ஐஸ்லாந்து ஜனாதிபதி குறிப்பிட்டார். இத்துறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை ஐஸ்லாந்து நவீனப்படுத்தி மேம்படுத்தியுள்ளதாகவும், அதன் பயனாக மீன், இறைச்சி மற்றும் பழ வகைகளை நீண்ட காலமாகப் பாதுகாப்பாக வைக்க முடிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்லாந்து ஜனாதிபதியின் யோசனைப்படி இருபக்கத் தொடர்பாடலை மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்னர் முரண்பாடு முடிவுற்றது. அதனைத் தொடர்ந்து இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து தெளிவுபடுத்தினார். இச்சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சகல கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்திருந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். முன்னாள் போராளிகள் சுமார் 11,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். சுமார், 2000 சிறுவர் பேராளிகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள், சுகாதாரம், நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக பாரியளவிலான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அங்கு வாழும் மக்கள் விரும்பும் பிரதிநிதிகளை நிர்வாகத்திற்காகத் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோம். என்றாலும் இந்த யதார்த்தத்தைக் கண்டு கொள்ளாதவர்கள் இலங்கைக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கின்றனர் என்றும் அவர் கூறினார். சாவல்களை வெற்றிகொள்ள எம்மால் முடியும். வெளி அழுத்தம் அதற்குத் தடையாக உள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இப் பேச்சுவார்த்தையில் வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை எம்.பி. சஜின்வாஸ் குணவர்தனவும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment