Wednesday, January 22, 2014

அவுஸ்ரேலியா அரசின் விசேட பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் இடையே சந்திப்பு!

Wednesday, January 22, 2014
இலங்கை::அவுஸ்ரேலியா அரசின் விசேட பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் இன்று சந்திப்பொன்றை நடத்தியது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள 4 பேர் அடங்கிய அவுஸ்ரேலியா பாராளுமன்ற விசேட குழுவினர் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரமவை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இதன்போது யுத்தத்தின் பின்னரான கிழக்கு மாகாணத்தின் நிலைவரங்கள் தொடர்பில் மாகாண ஆளுநர் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

இலங்கைக்கு 15 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியா அரச விசேட பாராளுமன்ற உறுப்பினர் குழு நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment