Monday, December 2, 2013

வடக்கின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்!

Monday, December 02, 2013
இலங்கை::வடக்கின்  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று செல்லும் காமினி சில்வா வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 29 நவம்பர் 2013 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.
 
அவரின் சேவையை பாராட்டிய ஆளுநர் பிரியாவிடை அளித்தார். இதன் போது இருவரும் நினைவுப்பரிசில்களை பரிமாறிக் கொண்டார்கள்.
ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பொறுப்பேற்றுள்ள பூஜித ஜெயசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment