Monday, December 2, 2013

கிளிநொச்சியில் 10,261 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்!.

Monday, December 02, 2013
இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் 10,261 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில்
40,594 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. மீள்குடியேறியவர்களில் 33 ஆயிரத்து 79 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாகவுள்ளது.

இவர்களில்
22,818 குடும்பங்களுக்கு அரச மற்றும் அரசசார்பற்றஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவிகள் மூலம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும்
, அதிகளவான கண்ணிவெடிகள் காணப்படுகின்ற முகமாலை மற்றும் கிளாலிப் பகுதிகளில் கண்ணிவெடிகளை  அகற்றும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் அவ்விடங்களில்
524 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment