Monday, December 2, 2013

30 தமிழக மீனவர்களின் காவல் டிசம்பர் 13 வரை நீட்டிப்பு!

Monday, December 02, 2013
இலங்கை::தமிழகத்தைச் சேர்ந்த 30 மீனவர்களின் காவலை டிசம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
யாழ்ப்பானம் சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 மீனவர்கள் கடந்த நவம்பர் 5ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
 
இவர்களது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, அவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை மேலும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment