Monday, December 9, 2013

ஏற்காடு வெற்றி: சென்னையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்!

Monday, December 09, 2013
சென்னை::ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் அ.தி.மு.க. முன்னணி நிலவரம் தெரியவந்ததும் ராயப் பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு தொண்டர்கள் திரள தொடங்கினார்கள்.
தொண்டர்கள் ஓட்டு எண்ணிக்கையை அறியும் வகையில் தலைமை கழகத்தில் ஒலிபெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டு நேரடி வர்ணனை ஒலிபரப்பானது.
ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க. முன்னணி நிலவரம் அறிவிக்கப்பட்டதும் கட்சித் தொண்டர்கள் புரட்சித் தலைவி வாழ்க என்று கோஷமிட்டனர்.
அமைச்சர் வளர்மதி தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள். தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசு மற்றும் லட்டுகளுடன் அங்கு குவிந்தனர். புரட்சித் தலைவி வாழ்க என்று கோஷமிட்டபடி பட்டாசுகளை வெடித்தனர்.
நிகழ்ச்சியில் ராஜலட்சுமி எம்.எல்.ஏ., மகளிர் அணி செயலாளர் சசிகலாபுஷ்பம், தென்சென்னை மாவட்ட தலைவர் வி.என்.ரவி. தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், கவுன்சிலர்கள் கின்னலன் (எ) ஆறுமுகம் டி.சிவராஜ், நூர்ஜகான், வேளாங்கண்ணி, பாபு, கற்பகம், மாணவர் அணி மாநில செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், மாவட்ட செயலாளர் ராமலிங்கம், நிர்வாகிகள் கடும்பாடி, வருகை பகுதி பேரவை செயலாளர் டி.ஜி.முரளி பெசன்ட்நகர் நடராஜன், அகில இந்திய கிறிஸ்தவர்கள் விடுதலை முன்னணி தலைவர் தேவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழைய மகாபலிபுரம் ரோடு துரைப்பாக்கத்தில் கவுன்சிலர் டி.சி.கோவிந்தசாமி தலைமையிலும், காரப்பாக்கத்தில் மண்டலக்குழு தலைவர் லியோசுந்தரம் தலைமையிலும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஒக்கியம் துரைப்பாக்கத்தில் கவுன்சிலர் எம்.எஸ். பாஸ்கரன், பெரும்பாக்கத்தில் முன்னாள் பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
அதே போல் ஆலப்பாக்கத்தில் மதுரவாயல் தொகுதி செயலாளரும் 146வது வார்டு உறுப்பினர்மான ஜிவானந்தம் எம்.ஜி.ஆர். சிலைககு மாலை அணிவித்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். உடன் மதுரவாயல் தொகுதி துணை செயலாளர் தென்றல் குமார், மாரி, அப்துல் சாதர், ராஜி, மயில், சரவணன், சந்திரன், பழனிவேல் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment