Monday, December 09, 2013
இலங்கை::மறைந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நாளை மற்றும் நாளை மறுதினம் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் தேசியக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படியும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு தினங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு இலங்கை பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சின் செயலாளர் பீ.பி.அபேகோன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment