Monday, December 9, 2013

இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்குவது ஒன்றும் புதிய விடயமல்ல: இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய!

Monday, December 09, 2013
இலங்கை::இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்குவது ஒன்றும் புதிய விடயமல்ல என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
மிக நீண்ட காலமாக இந்தியாவில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் ஆகியோருக்கு இந்தியா தொடர்ச்சியாக பயிற்சி வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு தசாப்தகங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment