Thursday, November 21, 2013

பிரித்தானிய பிரதமரின் இலங்கை தொடர்பான கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா சக்தி அமைப்பினர் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

Thursday, November 21, 2013
இலங்கை::பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

ராவனா பலய அமைப்பினால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் கோரிக்கை விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை உள்விவகாரங்களில் பிரித்தானிய பிரதமர் தலையீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்த காலக்கெடு விதிக்க பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிற்கு அதிகாரமில்லை என தெரிவித்துள்ளது.

1948ம் ஆண்டுக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமேன ராவனா பலய தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தத் தகவலை பிரித்தானிய அரசாங்கத்திற்கு அறிவிப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment