Thursday, November 21, 2013

கோத்தபாயராஜபக்ஷ, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸை சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு!

Thursday, November 21, 2013
இலங்கை::இத்தாலி வத்திகானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயராஜபக்ஷ, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸை சந்தித்து அண்மையில் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
 
வத்திகானுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷவும் அவருடைய பாரியாரும் பாப்பரசரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினர்.
 
இந்நிலையில் பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ரோமிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment