Thursday, November 21, 2013
பீஜிங்::சீனாவில் அகு மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு ஹபே நகரத்தை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பெற்றோரிடம், குழந்தையை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அசைவற்ற நிலையில் இருந்த குழந்தை இறந்து விட்டதாக கருதி, இறப்பு சான்றிதழ் கொடுத்து குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஹபே நகராட்சி மயானத்தில் குழந்தைக்கு இறுதி சடங்கு நேற்று நடந்தது. குழந்தை சடலத்தை புதைப்பதற்கு முன்பு நொடிப்பொழுதில் அந்த குழந்தையின் உடலில் அசைவு தெரியவந்தது. திடீரென அந்த குழந்தை கதறி அழ ஆரம்பித்தது. இதனால் அங்கிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே குழந்தையை மயானத்தில் இருந்து அவசரமாக ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருள்ள குழந்தை இறந்ததாக சான்றிதழ் கொடுத்த சம்பவம் சீனாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது பணியில் இருந்த டாக்டர், நர்ஸ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்தபோது குழந்தை திடீரென கதறி அழுதது. சீனாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment