Tuesday, November 26, 2013
இலங்கை::யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புரியாமை வருத்தமளிப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை புறக்கணித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும், அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்தியை பல நாடுகள் பாராட்டியுள்ளதாகவும், இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது வரவு செலவுத் திட்டங்களும் தேசிய பொருளாதார இலக்கு ஒன்றை நோக்கி நகர்த்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்தியை நிலைநாட்டும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தாய், சேய் மரண எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment