Tuesday, November 26, 2013

முல்லைத்தீவில் மோதல்கள் இடம் பெற்றவேளை யுத்த பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் விவசாய நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிப்பு!

Tuesday, November 26, 2013
இலங்கை::மோதல்கள் இடம் பெற்றவேளை யுத்த பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்கும் ஒரு கட்டமாக மேலும் ஒரு தொகுதி காணி (23 ஏக்கர்) உரிமையாளர்களிடம் முல்லைத்தீவில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.
இக்காணிகள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிகாரிகள், கேப்பாபிலவு கிராம நலன்புரிச்சங்ங உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் கையளிக்கப்பட்டன.
 
விடுவிக்கப்ப்பட்ட காணிகளில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை உரிமையாளர்கள் ஆரம்பித்த அதேவேளை இராணுவத்தினர் தமது பங்களிப்புகளையும் விதை வகைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினர்.
ஏற்கனவே படையினரால் பயன்படுத்தப்பட்ட 50 வீடுகள் மற்றும் 22 காணித்துண்டுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் சொத்துக்கள் அவர்களிடமே மீள வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment