Tuesday, November 26, 2013
இலங்கை::பிரித்தானிய பிரதமர் இலங்கை வந்ததும் வடக்கிற்கு சென்றதும் அங்கு தமிழ் மக்களை குழப்பியடித்து பின்னர் தனது கருத்துகளை முன்வைத்தமையுமானது தனது நாட்டில் தமிழ்
மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கிலேயே ஆகும் என்று பிரதமர் தி.மு. ஜயரத்ன நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத்திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் இங்கு மேலும் கூறுகையில்,
2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டமானது மனிதனும் மனிதன் சார்ந்த இயற்கையும் பாரிய நன்மைகளை அடையும் விதத்தில் அமைந்திருக்கின்றது என்பதை என்னால் கூறமுடியும்.
எதிர்க்கட்சியினால் இதனைப் புரிந்து நன்மைகளை அனுபவிக்க முடியும்.
இவ் வரவு செலவுத் திட்டத்தில் எத்தகைய நன்மை கிடைத்திருக்கின்றது என்பதை மக்கள் நன்கு உணர்ந்து கொள்வர்.
சுகாதாரத்துறை, பொலிஸ்துறை ஆகியவற்றுக்கு புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்து மக்கள் இந்த வரவு- செலவுத்திட்டத்தை விழுந்து வணங்கி வரவேற்றுள்ளனர்.
இலங்கைக்கு வந்த பிரித்தானியப் பிரதமர் வடக்கிற்கு சென்று தமிழ் மக்களை குழப்பியடிப்பதற்கு முயற்சி செய்தார்.
அதுமட்டுமின்றி அவர் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கிலேயே இதனைச் செய்துள்ளார்.
இதேவேளை, 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் தொடர்பில் கவிதையால் புகழ்பாடி ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment