இலங்கை::சட்டவிரோத போதைப்பொருள், ஆயுதம் மற்றும் ஆட்கடத்தல் என்பன இந்த பிராந்தியத்தின் அச்சுறுத்தலாக காணப்படுகின்றன. இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டு கூட்டுறவுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதன் மூலமே உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடுகளுக்கு இடையில் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல், அரச திணைக்களம், சட்ட அமுலாக்கல் அமைப்புகளுக்கு இடையிலான நெருக்கமான கூட்டிப்ணைப்பு, இரு தரப்பு மற்றும் பல் தரப்பு கூட்டு செயற்பாடுகள் மூலமே இவற்றை தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தனியொரு நாட்டினால் இதனை முறியடிக்க முடியாது. எனவே கூட்டுச் செயற்பாடின்றி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் ‘கோல் டயலொக் 2013’ உயர் மட்ட பாதுகாப்பு மாநாடு நேற்று காலி லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயலத் கொலம்பகேயின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கை மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது. இதனை தொடர்ந்தும் இலங்கை முன்னெடுக்கும் யுத்தத்திற்கு பின்னர் சகல துறைகளிலும் முன்னேறி வருகின்றது.
அதேபோன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு தற்போது தேவைப்படுகிறது அதன் நட்பு நாடுகளின் ஆதரவே தவிர விமர்சனங்கள் அல்ல. எனவே விமர்சிப்பதை விட்டு விட்டு உண்மையான பொருளாதார கூட்டுறவுக்கு வழிவகுக்கும் வகையில் நட்பு நாடுகள் உண்மையானதும் நேர்மையானதுமான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.
இலங்கையுடன் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகள் இதனையே தற்போது செய்து வருகின்றன. இதற்காக முழுநாடும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது என்றார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடலில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரு பிரச்சினையாக இருந்தது. எனினும் இந்த அச்சுறுத்தலை புலிகளின் கடற் புலிகளின் பிரிவு தீவிரமாக செயற்பட்ட போது இலங்கை அதனை ஒடுக்கியது. அதேபோன்று அல்கைதா, அல் ஷபாப், லக்ஷ்கர் இ தைபா ஆகியவற்றின் பயங்கரவாத செயல்கள் இந்த பிராந்தியத்தில் இடம்பெறக்கூடிய அச்சுறுத்தல் தொடர்ந்தும் உள்ளது.
புலிகள் அதிவேக தாக்குதல் படகுகள் மூலம் கடற் கொள்ளையிலும் ஈடுபட்டனர். அதேபோன்ற நடவடிக்கைகளில் தற்போது சோமாலியக் கடற்கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
உலகளாவிய பயங்கரவாதம் என்பது பயங்கரவாத அமைப்புக்கள் தமது குறிக்கோளை அடைவதற்காக வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைப்பதாகும். இவ்வாறான பயங்கர வாதம் எங்கு இடம்பெற்றாலும் அது ஒடுக்கப்பட வேண்டும். அவ்வாறான முயற்சிகளுக்கு ஒவ்வொரு நாடும் மற்றைய நாட்டுக்கு முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு நாடுகளுக்கு இடையே உயர் மட்ட உண்மையான கூட்டுறவு அவசியமாகும். கூட்டு ரோந்து, கூட்டுச் செயற்பாடுகள் மூலம் செயற்படுத்தலாம்.
சிறிய நாடுகளின் கடல் வழி பாதுகாப்புக்கு உலகின் பிரதான கடல் வலிமை மிக்க நாடுகள் உதவி வழங்க வேண்டும்.
அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு இரண்டு பெரிய ரோந்து கப்பல்களை அடுத்த வருடம் வழங்கவுள்ளது. இதன் மூலம்சட்ட விரோத ஆட்கடத்தலை தடுப்பதுடன் இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்த முடியும் என்றார்.
இந்து சமுத்திரத்தின் பிரதேச வழியாக உலகளாவிய வர்த்தகத்தின் பெரும் பகுதி இடம்பெறுகிறது. மத்திய கிழக்கிலிருந்து சீனா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் எடுத்துச் செல்வது இதில் முக்கியமானதாகும். அதேவேளை மேற்படி நாடுகளின் கைத்தொழில் உற்பத்திகள் இந்து சமுத்திரத்தின் வழியாகவே உலகின் ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இப்பிராந்தியத்தின் பெரிய நாடுகளாக சீனாவும் இந்தியாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி இரு நாடுகளினதும் அபிலாஷை தொடர்பாக சர்வதேச சமூகத்தில் பேசப்படுகிறது. சீனாவும், இந்தியாவும் தமது கடல் வலிமையை அதிகரித்துக் கொள்ளும் உத்தேசத்தை கொண்டுள்ளன.
சீனாவின் பொருளாதாரத்திற்கு இந்து சமுத்திர கப்பல் பாதைகள் தேவையாக உள்ளன. அதேபோன்று இந்தியாவுக்கும் இவ்வாறான தேவை உள்ளது. இந்நிலையில் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளில் சீன நிதியுதவியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகங்கள் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா மிகப் பெரிய அண்டைய நாடாகும். அத்துடன் பிராந்தியத்தின் முக்கிய நாடாகவும் உள்ளது. அதுமட்டுமன்றி சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் உறவுகள் சரித்திரபூர்வமானவை.
அதேநேரம் சீனாவுடனான எமது உறவுகளும் பல நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்தது.
சீனா இலங்கையின் முதன்மை அபிவிருத்தி பங்காளியாகும். நாட்டின் தெற்கே செல்லும் கப்பல் பாதைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஹம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கு சீனா உதவியுள்ளது.
இந்நிலையில் இந்து சமுத்திர கடல் போக்குவரத்து மிக முக்கிய வர்த்தக போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக அமைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தேவேந்திர குமார் ஜோசி, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயாரத்னாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, உட்பட 35 நாடுகளின் கடற்படை உயர் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment