Tuesday, November 26, 2013
புதுடெல்லி::இந்திய_மியான்மர் எல்லையை வலுப்படுத்த அங்கு பாதுகாப்புப் பணியிலிருக்கும் அசாம் ரைபிள்ஸ் படையினருக்குப் பதிலாக 41 ஆயிரம் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை ஈடுபடுத் துவது குறித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எல்லைப்பகுதி உள்கட்டமைப்பை ரூ.500 கோடியில் மேம்படுத்தவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. 1640 கி.மீ. தூரமுள்ள இந்திய _ மியான்மர் எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் நிறுத்துவது குறித்த விரிவான அறிக்கையை இப்படை அதிகாரிகள் தயார் செய்து வருகிறார்கள். இந்திய_ மியான்மர் எல்லைப் பகுதி பாதுகாப்புக்கு 41 ஆயிரம் வீரர்கள் தேவைப்படுவார்கள் என அதிகாரிகள் தரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment