Tuesday, November 26, 2013
சென்னை::ஆட்சியில் இருந்த போது ஒரு மாதிரியாகவும், ஆட்சியில் இல்லாத போது வேறு மாதிரியாகவும் திமுக தலைவர் கருணாநிதி பேசுவதாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறியிருக்கிறார்..
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன் வாக்குமூலம் திரிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் தனது இளம் பிரயாத்தை சிறையில் கழித்ததற்கு நியாம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:_
பதவியில் இருக்கும் போது ஒரு மாதிரியாவும், பதவியில் இல்லாத போது வேறு மாதிரியாகவும் அரசியல்வாதிகள் பேசுவது வாடிக்கை ஒன்று. அவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி பேசுவது கண்டனத்திற்கு உரியது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

No comments:
Post a Comment