Monday, November 25, 2013
இலங்கை::பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியான ஒரு ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
காலியில் இன்று ஆரம்பமான காலி கலந்துரையாடலில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சில நாடுகள் பயங்கரவாத்திற்கு எதிரான தமது போராட்டங்களை தேர்ந்தெடுத்த நிலைப்பாட்டில் மேற்கொள்கின்றனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் உலகளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். பயங்கரவாதிகள் தமது இலக்கை அடைய பொது மக்களை இலக்கு வைக்கின்றனர்.
பயங்கரவாத்தை நசுக்க நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஒவ்வொரு நாடு முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும்.
பயங்கரவாத்தை தோற்கடிக்க நாடுகள் இடையிலான ஒரு உண்மையான ஒருங்கிணைந்த முறையான அமைப்பு தேவைப்படுகிறது.
புலனாய்வு தகவல் பரிமாற்றங்கள், கடல் ரோந்து பாதுகாப்பு, கண்காணிப்பு என்பன கடற்படையினர் இடையில் கூட்டு முயற்சிகளை அதிகரிக்க செய்யும்.
பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்க இதுவே சிறந்த ஒரு வழியாக அமையும் என்றார்.

No comments:
Post a Comment