Tuesday, November 19, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்கு நவீன ரக கைத்துப்பாக்கி ஒன்றை பரிசளித்ததாக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் நீதிமன்றில் சாட்சியம்!

புலிகளின் தலைவர்  பிரபாகரன் தனக்கு நவீன ரக கைத்துப்பாக்கி ஒன்றை பரிசளித்ததாக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
 
தாம் ஏவுகணைத் தாக்குதலில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக இவ்வாறு கைத்துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராகன வழக்கு விசாரணைகள் அனுராதபுரத்தில் நடைபெற்று வருகின்றது.
ராசதுரை ஜெகன் என்ற முன்னாள்  புலிகளின் உறுப்பினரே  இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார்.
 
வில்பத்து சரணாலயப் பகுதியில் அன்டனோவ் 32 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தி அதில் இருந்த 37 படையினரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
தாக்குதல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமைக்காக தமக்கு பிரபாகரன் அதி நவீன கைத்துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
 
இந்த தாக்குதல்களின் வெற்றி காரணமாக  புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமக்கு நவீன ரக கைத்துப்பாக்கி ஒன்றை பரிசளித்ததாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment