Tuesday, November 19, 2013
இலங்கை::இளம் பெண் சட்டத்தரணியின் இடையில் முத்தம் கொடுத்த ஒரு பிள்ளையின் தந்தையான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதா வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் இந்தச் சட்டத்தரணி தனது வீட்டில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது சந்தேக நபர் அங்கு வந்து பெண் சட்டத்தரணியின் இடையில் முத்தமிட்டுள்ளார்.
சட்டத்தரணியான பெண் கூச்சலிடவே சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து சட்டதரணி உடனடியாக வெலிகமை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யவே பொலிஸ் இன்ஸ்பெக்டர் பத்ரடி. காலிங்க தலைமையிலான பொலிஸ் கோஷ்டி சந்தேக நபரான ஹோட்டல் ஊழியரை கைது செய்துள்ளனர்.
இவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment