Tuesday, November 19, 2013

இலங்கையின் யுத்த நிலைமைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் நிலையில் இலங்கை இல்லை: கிறிஸ் நொனிஸ்!

Tuesday, November 19, 2013
இலங்கை::எவரேனும் ஒருவர், ஒரு நாடு தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு முன்னர், அந்த நாட்டிற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமானது என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கலாநிதி கிறிஸ் நொனிஸ் தெரிவிக்கின்றார்.
 
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவொரு உள்ளக விவகாரம் எனவும் எதில் சர்வதேசத்தின் தேவை காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்தகால யுத்த நிலைமைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லும் நிலைமையில், தற்போது இலங்கை இல்லை என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இதற்கென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் வேறு சில குழுக்கள்  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நொனிஸ் தெரிவித்துள்ளார்.
 
யுத்த நிலைமைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கான தேவை எம்மிடம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர்,  இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலையில், நாங்கள் தற்போது இல்லை. ஆயினும் ஒருவர் தொலைக்காட்சி அல்லது நாளிதழ் ஒன்றை மேற்கோள்காட்டி கருத்து வெளியிடுவதனை தடுக்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கைக்கு வருகைதரும் ஒருவர் கொழும்பு மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கு மாத்திரம் விஜயம் செய்யாது, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்து, நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை சந்திக்க வேண்டுமெனவும் நொனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
 
கருத்து வெளியிடுவதற்கு முன்னர், இலங்கை மக்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்ற விடயத்தினை உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment