Tuesday, November 19, 2013
இலங்கை::இலங்கை மீனவர்கள் 121 பேர் தற்போது வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக
கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்தியாவில் 107 மீனவர்களும், மியன்மாரில் 12 மீனவர்களும் மொரீசியஸில் இரண்டு மீனவர்களும் மியன்மாரில் 12 மீனவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மீனவர்களுடன் 24 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் பொறுப்பில் 20 படகுகளும், மியன்மார் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளில் தலா இரண்டு படகுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பதற்கு இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment