Tuesday, November 19, 2013

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் இலங்கை தமிழர் பிரச்னை முன்னிலைப்படுத்தப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

Tuesday, November 19, 2013
சென்னை::பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் கவனிப்பு குழு கூட்டம் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கமலாலயத்தில் நேற்று மாலை நடந்தது. தேசிய பொது செயலாளர் பி.முரளிதர் ராவ் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் டாக்டர் தமி ழிசை சவுந்தர்ராஜன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், துணை தலைவர் எச். ராஜா, அமைப்பு பொது செயலாளர் மோகன் ராஜுலு கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர், முரளிதர்ராவ் அளித்த பேட்டி:வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் விலைவாசி உயர்வு, ஊழல், வேலையில்லா திண்டாட்டம், இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை போன்றவை முன்னிலைப்படுத்தப்படும்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும். தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது முக்கிய தலைவர்களுடன் பேசி உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்தே காமன்வெல்த் மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவில்லை. பாஜ ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறலுக்கு குரல் எழுப்பப்படும். டெல்லியில் நடைபெறும் தேர்தல் மட்டுமல்ல, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுக்கு மாற்றாக வேறு அணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். வருகிற ஜனவரி முதல் பாஜகவில் உள்ள அனைத்து அணிகளுக்கு இடையே தனித்தனியே ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment