Friday, November 15, 2013
ஈரோடு::இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துணை நிற்பதற்காகவே காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக சல்மான்குர்ஷித் கலந்து கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை தமிழர்கள் குறித்தும், காமன்வெல்த் மாநாடு குறித்தும் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் தெளிவாக எடுத்து கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் முற்றம் ஏற்புடையது அல்ல. அதில் எங்களுக்கு உடன்பாடும் கிடையாது.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்று அவரை 2 முறை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டேன். 8 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் அதில் கலந்து கொள்ளவில்லை. இந்திய அரசின் பிரதிநிதியாக வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித்தும், அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்பதற்காக சரியான முடிவை எடுத்துள்ளார்கள். . இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment