Wednesday, November 13, 2013

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இன்று இலங்கை வந்தார்!

Wednesday, November 13, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வௌிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். 

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்- இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் உட்பட குழுவினரை  பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன வரவேற்றார்.
 
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் - அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இந்த குழுவினரு ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது.
 
விமான நிலையத்தில் வைத்து கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்- தேசிய அபிலாஷைகளை கருத்திற்கொண்டே பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அரசு தீர்மானித்தது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment