Wednesday, November 13, 2013

கடும் எதிர்ப்பால் கொழும்பு திரும்பிய புலிகளின் ஆதரவு செனல் 4 ஊடகவியலாளர்கள்: தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களின் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் அம்பலமாகியுள்ளன!

Wednesday, November 13, 2013
இலங்கை::கடும் எதிர்ப்பால் கொழும்பு திரும்பிய புலிகளின் ஆதரவு செனல் 4 ஊடகவியலாளர்கள்: தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் மற்றும்  புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களின்  நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் அம்பலமாகியுள்ளன.
 
பிரித்தானியாவின் புலி ஆதரவு செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேவிற்கு அனுராதபுரத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மக்ரே, ரயில் மூலம் வவுனியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

மக்ரே வவுனியா பயணம் செய்வதனை அறிந்து கொண்ட மக்கள், கடுகதி ரயிலை மறித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

ரயில் பாதையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை காண்பித்தும் போராட்டம் நடத்தியுள்ளனா,

இலங்கைக்கு எதிராக போலி யுத்தக் குற்றச்சர்டுக்களை சுமத்தி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக மக்ரே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மக்ரேவிற்கு எதிரான போராட்டம் காரணமாக கடுகதி மற்றும் யாழ்தேவி ரயில்கள் அனுராதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த பிக்குகளும்,புலிகளால் கொல்லப் பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்  பொதுமக்களும் ரயில் பாதையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு காரணிகளை கருத்திற் கொண்டு மக்ரேவை வவுனியா செல்லாது, கொழும்பு திரும்புமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் அதிக நேரம் ரயிலின் உள்ளேயே இருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் பின்னர் கொழும்பு நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
புலிகளால் கொல்லப் பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment