Thursday, November 14, 2013

வண்டலூர் பூங்காவில் முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆய்வு!

Thursday, November 14, 2013
சென்னை::வன விலங்குகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று, அங்கு வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்தும், பார்வையாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்..
 
வன விலங்குகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 12.11.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று, அங்கு வன விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்தும், பார்வையாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். 
 
சென்னையில் இருந்த மிருகக் காட்சி சாலை, 1985 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூருக்கு மாற்றப்பட்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 602 எக்டேர் பரப்பளவில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் இந்த உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான பாலூட்டி இனங்கள், பறவையினங்கள், ஊர்வன இனங்கள், என மொத்தம் 144 வன உயிரினங்களைச் சார்ந்த 1,398 விலங்குகள் பொதுமக்களின் பார்வைக்கு உள்ளன. இந்தப் பூங்காவில் உள்ள உயிரினங்களை சராசரியாக ஆண்டிற்கு 20 லட்சத்திற்கும் & மற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களிக்கின்றனர். 
வன விலங்குகளின் மீது மிகுந்த பரிவு கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவற்றினை திறம்பட நிர்வகிக்கும் வகையில், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம் ஒன்றை 3.12.2004 அன்று ஏற்படுத்தினார். 
 
பின்னர், சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, & வலூர் அமிர்தி உயிரியல் பூங்கா மற்றும் திருச்சி உயிரியல் பூங்கா ஆகியவையும் இந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் செயல்படும் இந்த ஆணையம் 6.3.2013 அன்று திருத்தியமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் 28.5.2013 அன்று தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் தலைவருமான ஜெயலலிதா அவர்களின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் உட்புறம் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு, நுழைவுக் கட்டணம், பொது மக்களுக்கான வசதி உட்பட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதித்ததோடு, துருப்பிடிக்காத கதவுகள் அமைப்பது, குப்பை கழிவுகளை அகற்ற புதிய வாகனங்களை வாங்குவது மற்றும் அதற்கான ஓட்டுநர் பணியிடங்களை உருவாக்குவது, மழைநீர் சேகரிப்பிற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற பணிகளுக்காக 2 கோடியே 24 லட்சம் பொயை நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்கள். 
 
இதன் தொடர்ச்சியாக, 12.11.2013 அன்று வண்டலூரில் அமைந்துள்ள அறிடர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு திடீரென்று வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் தலைவருமான ஜெயலலிதா, இந்தப் பூங்காவில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கருத்து விளக்க மையத்தினை பார்வையிட்டார். 
இதனைத் தொடர்ந்து, காட்டு மாடுகள், சிறு கரடிகள், இமாலய கருங்கரடிகள், ஐரோப்பிய பழுப்பு நிறக்கரடிகள், விஷமில்லா பாம்புகள், வெள்ளை ஆமைகள், இந்திய கருப்பு ஆமைகள், முக்கோடு மலை ஆமைகள், சதுப்பு நில முதலைகள், நீர்யானைகள், நெருப்புக் கோழிகள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள் மற்றும் யானைகள் இருப்பிடங்களுக்குச் சென்று பார்வையிட்டதோடு, அவற்றிற்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், அவைகளை பராமரிக்கும் முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். 
முதலமைச்சரால் ராமா, சந்திரா, அர்ஜூனா, ஆத்ரேயா, காவேரி என பெயர் சூட்டப்பட்ட வெள்ளைப் புலிக் குட்டிகள் வசிக்கும் இருப்பிடத்திற்கும், வீரா என்று பெயர் சூட்டப்பட்ட ஆண் சிங்கக் குட்டியின் இருப்பிடத்திற்கும், வித்யா, ஆர்த்தி நேத்ரா என்று பெயர் சூட்டப்பட்ட மரபியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட புலிக் குட்டிகள் வசிக்கும் இருப்பிடத்திற்கும், 'வேடந்தாங்கல்' பறவைகள் இருப்பிடத்திற்கும் சென்று பார்வையிட்டு, அவற்றின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்தார். 
 
மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா 64_வது பிறந்த நாளினை முன்னிட்டு மான்கள் உலாவும் பகுதியில் நடப்பட்டு நன்கு வளர்ந்துள்ள ஆல், அரசு, நாவல், இலுப்பை, மா, பலா, கொய்யா, மாதுளை போன்ற பல்வகை மரக் கன்றுகளையும், மழைநீர் சேகரிப்பிற்காக 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் எட்டு கசிவு நீர் குட்டைகளில் எட்டாவது கசிவு நீர் குட்டையினையும், இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களிலேயே முதன்முறையாக விலங்கு இருப்பிடங்களில் துருப்பிடிக்காத இரும்பினாலான (நசிஹடுடூங்டீஙூஙூ நசிடீடீங்) கூண்டுகள் அமைக்கப்பட்டு வருவதையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 
 
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவினையும், அங்குள்ள உயிரினங்களையும் சிறப்பான முறையில் பராமரித்து வரும் அதிகாரிகள் மற்றும் அனைத்துப் பணியாளர்களையும் பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இங்கு வரும் பார்வையாளர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, இந்தப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். 
இந்த ஆய்வின் போது, வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், அரசு தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் கே.எஸ்.வி.வி.பி. ரெட்டி, மற்றும் வனத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment