Sunday, November 17, 2013

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Sunday, November 17, 2013
இலங்கை::பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளின் க்ளோபல் தமிழ் போரம், புலிகளின் பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலிகளின் இனச் சுத்திகரிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியவற்றின் தூண்டுதலின் பேரில் டேவிட் கமரூன் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக பிரித்தானிய பிரதமர், தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து கமரூனின் கட்சி இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை ஓர் பிரித்தானிய காலணியாகக் கருதியே கமரூன் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். உள்ளுர் விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை எனவும், செனல்4 ஊடகத்தின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈராக்கில் பிரித்தானியா மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் இன்னமும் விசாரணைகள் பூர்த்தியாகவில்லை என அவா குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட
புலி உறுப்பினர்கள் தற்போது பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்,

No comments:

Post a Comment