Sunday, November 17, 2013

2015ம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு மால்ட்டாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Sunday, November 17, 2013
இலங்கை::2015ம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு மால்ட்டாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பொதுநலவாய அரச தலைவர்களால் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2015 பொதுநலவாய மாநாடு மொரிஸியசில் நடைபெறுவதாக இருந்தது.

எனினும், இம்முறை இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் மொரிஸியஸ் பிரதமர் கலந்துகொள்ளாததோடு, 2015 மாநாட்டை நடத்துவதற்கும் மறுப்புத் தெரிவித்தார்.

இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதால் மொரிஷியஸ் பிரதமர் இலங்கை மாநாட்டை புறக்கணித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த மாநாடு மால்ட்டாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2005ம் ஆண்டு பொதுநலவாய மாநாடுகள் மால்டாவில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment