Sunday, November 17, 2013
சென்னை::இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக தமிழர் புலி ஆதரவாளர் அமைப்பு (டெசோ) மீண்டும் தொடங்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ‘டெசோ’ அமைப்பின் தலைவராக உள்ளார். இலங்கை தமிழர்கள் மீது அந்த நாட்டு அரசு நடத்திய மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று இந்த அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
ஒரு துரும்பு கூட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தி.மு.க. தலைவர் (கரடி புலி) கருணாநிதி கூறினார். பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. என்றாலும், வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை சென்றுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் (கரடி புலி)
கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ‘டெசோ’ அமைப்பை கூட்டி முடிவு செய்வோம் என்று கூறி இருந்தார். அதற்கான கூட்டம் இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ‘டெசோ’ கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய அரசுக்கு எப்படி அமுத்தம் கொடுக்கலாம் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.


No comments:
Post a Comment