Friday, November 15, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக்கிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் வில்லியம் ஹெக் தெரித்ததாக கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கையில் தமிழ் சமூகப் பிரதிநிதிகளையும் மற்றும் நாடு முழுவதும் மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், சமரசம் போன்றவற்றுக்கு குரல் கொடுப்பவர்களையும் சந்திக்கும் பிரதான நோக்கத்துடனேயே நான் இலங்கை வந்தேன். இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வாகும் என்பதை பிரித்தானிய பிரதமர் வடக்கு சென்று நேரில் பார்த்து முடிவெடுப்பார்.
யுத்தக் குற்றம் குறித்து வெளிப்படையான, சுதந்திர விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தி அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயல்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடனான அரசியல் தீர்வொன்றை எட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்...

பிரித்தானிய, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றின் பொதுநலவாய பிரதிநிதிகளை சந்தித்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றல், காணிகளை உரியவரிடம் கையளித்தல், ஓர் அரசியல் தீர்வை உருவாக்குதல் என்பவற்றை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர், அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் யூலியா பிஷப், பிரித்தானிய வெளிநாட்டு செயலாளர் வில்லியம் ஹேக்,இந்திய வெளிநாட்டமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரை சந்தித்தனர்.
மாகாண ஆளுநரிடம் ஏராளமான அதிகாரங்கள் குவிந்துள்ளன. இந்த அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டும் என நாம் இந்த பிரதிநிதிகளிடம் பிரஸ்தாபித்தோம் என பிரேமசந்திரன் கூறினார்.
இந்திய வெளிநாட்டமைச்சின் செயலாளருடனான சந்திப்பைப்பற்றி கேட்டபோது வடக்கு மக்களுக்கு இந்தியா அதன் ஆதரவை மீண்டும் உறுதியளித்தது என அவர் கூறினார்.
இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதுடில்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளாரென பிரேமசந்திரன் கூறினார்.

No comments:
Post a Comment