Friday, November 15, 2013

இளவரசர் சார்ள்ஸ் கொழும்பில் அவரது 65 வது பிறந்த நாளை கொண்டாடினார்!

Friday, November 15, 2013
இலங்கை::பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது இளவரசி ஆகியோர்  நேற்று மாலை அலரி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதியை சந்தித்தனர். 

நேற்று இளவரசர் சார்ள்ஸ் தனது 65ஆவது பிறந்த தினத்தை அலரி மாளிகையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். 

இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் குடும்பத்தினரும், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் பஷில் ராஜபக்ஷவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் கலந்து கொண்டனர்.
இதேவேளை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் வைத்து சார்ள்ஸ்  நேற்று மாலை கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

No comments:

Post a Comment