Thursday, November 14, 2013
இலங்கை::புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளில் தமது பிரதிநிதியான தீபக் ஒப்ராய் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களைக் கனடா மறுத்துள்ளது. பொதுநலவாய மாநாட்டில் கனடா சார்பில் பங்குகொள்ள சென்றுள்ள நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணத்துக்கு சென்றிருந்தார்.
இதன்போது போரில் உயிர் நீத்தவர்களுக்காக ஆனையிறவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். இதனைத் புலிகளை நினைவு கூரும் செயற்பாடென இலங்கை அரசு விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள கனடா அரசாங்கம், புலிகளின் சகல செயற்பாடுகளையும் நாம் அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பயங்கரவாத அமைப்பாகக் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து நாம் தடைவிதித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்ளும் கனேடியப் பிரதிநிதியான தீபக் ஒப்ராய் வடக்கு சென்றிருந்தபோது வன்முறையில் பாதிக்கப்பட்ட இலங்கையின் அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பாக அதனை பயன்படுத்தினார்.

இதனால் ஆனையிறவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தார். இலங்கையில் சகல மக்களும் உறுதியான சமாதான சூழ்நிலையில் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கனடா உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment