Thursday, November 14, 2013

போலியான காணிப் பிரச்சினை ஒன்றினை மையமாகக் கொண்டு நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் வடக்கில் போராட்டம்: இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Thursday, November 14, 2013
இலங்கை::நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் வடக்கில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளும் வகையில் தற்பொழுது வடக்கில் போராட்டம் நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
போலியான காணிப் பிரச்சினை ஒன்றினை மையமாகக் கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டமானது மெய்யான நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய பிரித்தானிய பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 11000 ஏக்கரில் இராணுவ முகாம்கள் காணப்பட்டதாகவும் தற்போது அந்த அளவு 6000 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தந்திரோபாய நோக்கங்களுக்காகவே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் கடந்த 50-60 ஆண்டுகளாக காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment