Thursday, November 14, 2013இலங்கை::பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பிரிவினைவாதத்திற்கு ஊக்கமளிக்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரிவினைவாதத்தை தூண்ட முனைப்பு காட்டும் தரப்பினரின் கரங்களை வலுப்படுத்த அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்றுள்ள கனேடிய பிரதிநிதி வடக்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திய நிகழ்விற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் கனடா உள்ளிட்ட பல பொதுநலவாய நாடுகள் உறுப்பு நாடுகளில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்ச்சையில்லா ஓர் இடத்தில் கனேடிய பிரதிநிதி தீபக் ஒபுராய் மலர் அஞ்சலி செலுத்தியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் பல நாடுகளின் தலைநகரங்களில் பாரிய பொருட் செலவில் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சில நாடுகளின் அரசியல் தலைவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment