Saturday, November 23, 2013

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை கோர்ட்டு உத்தரவை பெற்று மீண்டும் கட்டுவோம்: (புலி பினாமி) பழ.நெடுமாறன்

Saturday, November 23, 2013
திருச்சி:.தஞ்சை விளார் பகுதியில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு முற்றத்துக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பூங்காவின் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சுற்றுச்சுவரை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.

அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் (புலி பினாமி) பழ.நெடுமாறன் உள்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் மட்டும் தஞ்சை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேருக்கும் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

அந்த உத்தரவு நகல் தஞ்சை கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து, திருச்சி சிறைக்கு நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்தது. ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஜாமீன் உத்தரவு வந்ததால், சிறை விதிகளின்படி நேற்று முன்தினம் இரவு பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படவில்லை. பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேரும் காலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறை வாசலில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவிய தொடங்கினர். காலை 9.10 மணிக்கு பழ.நெடுமாறன் உள்பட 81 பேரும் சிறையில் இருந்து விடுதலையானார்கள். அப்போது சிறை வாசலில் திரண்டு இருந்த தொண்டர்கள் பழ.நெடுமாறனை வரவேற்று கோஷம் எழுப்பினார்கள்.

திருச்சி சிறை வாசலில் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சட்டவிரோதமாக எதுவும் கட்டவில்லை. அனைத்துக்கும் அனுமதி வாங்கி தான் கட்டினோம். நீதிமன்ற ஆணையுடன் மீண்டும் அதே இடத்தில் இன்னும் அழகாக பூங்காவை வடிவமைப்போம். பூங்காவை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பூங்கா இடிக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment