Saturday, November 23, 2013

யாழ்ப்­பா­ணத்தில் முஸ்லிம்களின் மீள்குடி­யேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்­கு­ழு:­ வ-மு. விக்­னேஸ்­வ­ர­னுக்கு நன்றி தெரி­வித்­துள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர்!

Saturday, November 23, 2013
இலங்கை::முஸ்லிம்களின் மீள்குடி­யேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்க உறு­தி­ய­ளித்­துள்ள வட­மா­காண முத­ல­மைச்சர் சி. வி. விக்­னேஸ்­வ­ர­னுக்கு நன்றி தெரி­வித்­துள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர்
 
யாழ்ப்­பா­ணத்தில் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்ள இஸ்­லா­மிய அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸின் வீடு மீள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு இஸ்­லா­மிய தொல்­பொருள் காட்சி நிலை­ய­மாக மாற்­றப்­பட வேண்­டு­மென கோரிக்கை விடுத்­துள்ளார்.
 
ஏ.எச்.எச். அஸ்வர் எம்.பி முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் மேலும் பல கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­துள்ளார். நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள ஆணைக்­குழு காலம் தாழ்த்­தாது தமது பரிந்­து­ரை­களை முன்­வைக்க வேண்டும். யாழ்ப்­பா­ணத்தில் புலி­களால் சேத­மாக்­கப்­பட்­டுள்ள பாட­சா­லைகள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீள் நிர்­மாணம் செய்­யப்­பட வேண்டும்.
 
குறிப்­பாக புலி­களால் கதீஜா முஸ்லிம் வித்­தி­யா­லயம் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. யாழ். ஒஸ்­மா­னியா கல்­லூரி அரை­குறை நிலையில் உள்­ளது. இவைகள் கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும். மீள்­கு­டி­யே­றி­யுள்ள முஸ்­லிம்கள் வீடு வச­தி­யின்றி வாழ்­வா­தார அடிப்­படை வச­திகள் இன்றி பல இன்­னல்­க­ளுக்­குள்­ளாகி இருக்­கின்­றார்கள்.
 
முஸ்­லிம்­களின் காணி தொடர்­பான பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­துள்­ளன. நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள ஆணைக்­குழு இவ்வாறான பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்­பா­ணத்தில் முஸ்லிம்களின் மீள்குடி­யேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்­கு­ழு:­ வ-மு. விக்­னேஸ்­வ­ர­னுக்கு நன்றி தெரி­வித்­துள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர்!

No comments:

Post a Comment