Saturday, November 23, 2013
இலங்கை::வலிகாமம் வடக்கில் கொல்லன்கலட்டி , தந்தை செல்வாபுரம் மற்றும் மாவிட்டபுரம் ஆகியபிரதேசங்களில் 1299 குடும்பங்களைச் சேர்ந்த 4278 பேர் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. யான ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார் .
அமைச்சர் வீரகோன் மேலும் கூறுகையில்:-
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கொல்லன்கலட்டியில் 647 குடும்பங்களைச் சேர்ந்த 2175 பேரும் , தந்தை செல்வாபுரத்தில் குடும்பங்களைச் சேர்ந்த 1587 492 பேரும் , மாவிட்டபுரத்தில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 516 பேரும் என மொத்தமாக 4278 பேர் இதுவரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் .
இங்கு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 525 நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன . அத்துடன் நல நோம்புகைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , 20.5 மில்லியன் ரூபா செலவில் மருத்துவமனை ஒன்றும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது .
மேலும் மீள்குடியேற்றப்பட்டுள்ள 243 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன .
சிறிய தொழில் முயற்சிகளுக்காக கெயார் நிறுவனத்தினூடாக 113 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை 32 குடும்பங்களுக்கு பாஓ நிறுவனம் கால்நடைகளை வழங்கியுள்ளது .
மேலும் நீர்க்குழாய் மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்காக சேவா லங்கா நிறுவனம் 69 குடும்பங்களுக்கு உதவியுள்ளதுடன் ஹடெக் கிரியேட்டர்ஸ் நிறுவனமும் 9 குடும்பங்களுக்கு கால்நடைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது . இதேவேளை சி . எப் . நிறுவனமும் 20 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்றார் .

No comments:
Post a Comment