Saturday, November 23, 2013
இலங்கை::அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 68 வது பிறந்த நாளையும் இரண்டாவது தடவையாக பதவியேற்று மூன்று வருடங்கள் பூர்த்தியானதையும் முன்னிட்டு வட்டக்கண்டல் முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் (22.11.2013) காலை8.00 மணியளவில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எச்.யூ.எம்.யஹியா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டீ.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு அடிகல்லை நாட்டிவைத்தனர்.
புத்தளம் கல்வி வலயத்தின் தமிழ் பிரிவிற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.ஸன்ஹீர் மஹிந்த சிந்தனையூடாக கல்வி அபிவிருத்தி - அதுல, பாயிஸ் ஒப்பந்தத்தின் மூலம் புத்தளத்தில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சி பற்றி விஷேட உரையொன்றை நிகழ்தினார்.
இவ்வைபவத்திற்கு இஸ்மாயில்புரம் பெரிய பள்ளி நிர்வாக சபையினர், கிராம சேவகர், சமுர்த்தி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர்கள் உட்பட பெருந்தொகையான பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான இக்கட்டடத்திற்கான நிதியை வடமேல் மாகாண சபை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment