Wednesday, November 6, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இலங்கை படையினரின் பெயரைக் கெடுக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்: ஹத்துருசிங்க!

Wednesday, November 06, 2013
இலங்கை::வலிகாமம் வடக்கில் இலங்கை  படையினருக்கு வீடுகளை அமைப்பதற்காக தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ள குற்றச்சாட்டை யாழ்.படைத்தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நிராகரித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இலங்கை படைகளின் பெயரைக் கெடுக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்
 
நாம் பலாலிப் படைத்தளப் பகுதியில் புதிய முகாம்களை மட்டுமே நிறுவுகிறோம். இலங்கை இராணுவத்துக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்களும் கூச்சல் போடுகின்றன.
 
யாழ்.குடாநாட்டில் உள்ள எல்லா சிறிய முகாம்களையும் மூடிவிட்டு, பலாலி பெருந்தளப் பகுதிக்குள் புதிய முகாம்களை நிறுவுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment