Wednesday, November 06, 2013
இலங்கை::மட்டக்களப்பு கல்லடி பகுதியில் தங்குமிடம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த தங்குமிடத்தின் முகாமையாளரும் மேலும் இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அநுராதபுரம், விஹாரஹல்மில்லகுளம் பகுதியில் ஐவர் படுகொலை; தீவிர விசாரணைகள் ஆரம்பம்!
அநுராதபுரம், விஹாரஹல்மில்லகுளம் பகுதியில் வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுடன் ஹசலக்க பகுதியில் சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவர்கள் தமக்கு சொந்தமான ஹசலக்க பகுதியில் உள்ள வீட்டை விற்றதன் பின்னர், அங்குள்ள பொருட்களை அநுராதபுரத்துக்கு நேற்றுமுன்தினம் லொறியில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபரும் அவர்களுடன் இருந்துள்ளார்.
அதன் பின்னரே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை பிரேத பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அநுராதபுரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை உப்புவெளி பகுதியில் நூற்றுக்கும் அதிகமான மாடுகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது!
திருகோணமலை உப்புவெளி பகுதியில் நூற்றுக்கும் அதிகமான மாடுகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்டல்காடு பகுதியிலிருந்து மொரவெவ பகுதிக்கு மாடுகளை கொண்டுசெல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் நேற்று மாலை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
30 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முற்பட்ட வெளிநாட்டுப் பிரஜையின் கடவுச்சீட்டு போலியானது: பொலிஸ்!
30 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது கைதான சந்தேகநபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்த லைபீரிய நாட்டுக் கடவுச்சீட்டு போலியானது என்று சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கைதுசெய்யப்பட்டவர் எந்த நாட்டுப் பிரஜை என்பது குறித்து இதுவரை உறுதியாக தெரியவரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.
போதைப்பொருளை கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த வெளிநாட்டுப் பிரஜை நேற்று கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை 400 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹமபைகமுவ பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தள பகுதியில் கைதுசெய்யப்பட்ட குறித்த பொலிஸ் கன்ஸ்டபிள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.
உடகம பகுதியில் வெடி பொருட்கள், துப்பாக்கியுடன் இருவர் கைது!
உடகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் உடகம மற்றும் அக்குருஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை உடுகம நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்னைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment